Sunday, March 1, 2009

கேட் வின்ஸ்லெட் ஆஸ்கர் வாங்கிய The Reader

பெண்மையும் அழகும் ஒரு சேர அமைந்த நடிகைகள் மிகவும் குறைவு. Zero Size எலும்புக்கூடுகளுக்கு மத்தியில் பெண்மையின் நளினத்துடன் இன்ரும் வலம் வரும் கேட் வின்ஸ்லெட் டைட்டனிக் திரைப்பட கால கட்டத்தில் இந்த உலகின் கனவு தேவதை. நான் +2 படித்த கால் கட்டத்தில் அனைவரின் கனவுகளிலும் கேட் தான். டிகாபிரியோ சிகை அலங்காரத்துடன் என்னுடைய ரோசுக்காக கிருஷ்ணகிரி அரசாங்க குடியிருப்பு வளாகத்தில் காத்திருப்பேன். அதன் நேர் எதிர் இருந்த செண்டரல் பானாவிஷன் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது டைட்டானிக். 

அந்த கேட் - அழகு தேவதை - தன் காதலன் துரத்தி வர, நிலக்கரி எரியும் எஞ்ஜின் ஒளியில் தன் ஸ்கர்ட் பறக்க தேவதை போல ஓடி வருவார் - ஒளி ஓவியம் அது. என்னுடைய Ever Green Romantic Scence அது. அதே கேட்- காலத்தின் மாற்றத்தை தன் உடலில் சுமந்து, அனுபவங்களை தன் நடிப்பில் வெளிக்காட்டி- மனதைத் தொடும் ஒரு கதையாடலை தன் திறமையினால் மெருகூட்டி ஆஸ்கர் விருது வாங்கிச் சென்றீருக்கிறார். புகழ்பெற்ற The Reader என்ற நாவலை தழுவி அதே பெயரில் படைக்கப்பட்ட இப்படம் நெகிழ்ச்சியான ஒரு திரை அனுபவத்தை தருகிறது. மேலும் இது ஒரு உண்மைக்கதையும் கூட. 


இரண்டாம் உலகப்போரைப்போல கலை, இலக்கிய, படைப்பு சார்ந்த தளங்களுக்கு ஊற்றுகண்ணாக இருந்த சம்பவம் எதுவும் இல்லை. 60 ஆண்டுகள் முடிந்தும் கதைகளும் சம்பவங்களும், சுயசரிதைகளும் அருவி போல பொழிந்துக்கொண்டிருக்கிறது. என்றும் வற்றாது என்றே நினைக்கிறேன், ஏனெனில் இழந்த ஒவ்வொரு உயிருக்கும் ஒரு கதை என்றாலும் இன்னமும் இலட்சங்கள் மீதமிருக்கிறது. 

அழகான Artistic Phorno'வாக ஆரம்பிக்கும் திரைப்படம் வெவ்வேறு திசைகளில் பயணித்து முடிவில் ஆழந்த மௌனத்துடன் நமை கட்டிப்போடுகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னான ஜெர்மனியில் பேருந்தின் நடத்துனராக பனிபுரியும் ஆன்னா ஸ்க்மிட்ஷ் என்ற நடுத்தர வயது பெண்மணி மாற்றும் அவள் சந்திக்கும் உடல் நலமற்ற 15 வயது பையனுக்குமான உறவு கைக்கிளை எனும் பொருந்தாக்காமமாக மாறி, பொருந்தும் காதலாக உருக்கொண்டு போரினால் அலைக்கழிந்த ஆன்மாக்களுக்கு வசந்தகாலமாகிறது. 

தன் பள்ளி பாடங்கள் மற்றும் வெவ்வேறு இலக்கியங்களை அவன் படிக்க அவள் கேட்க பின் கட்டிலில் களிநடனம் புரிய என நகரும் நாட்களின் இன்பம் வெகுநாள் நீடிப்பதில்லை. திடீரென ஆன்னா ஒரு நாள் காணாமல் போக, அதற்கான காரணம் தெரியாமலும் அல்லது தான் அவள் மேல் கொண்ட கோபம் காரணமாக இருக்கலாம் என்றூம் வருந்தும் அச்சிறூவன் பிற்பாடு பள்ளி முடிந்து சட்டக் கல்லூரியின் மாணவனாக சேர்கிறான். 

சட்ட பாடத்தின் நீட்சியாக நீதிமன்றத்துக்கு செல்லும் அவனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. போர்குற்றவாளியாக ஆன்னா விசாரணையில். அவளின் பிண்ணனி அப்போது தான் அவனுக்கு தெரியவருகிறது. போர்க்குற்றங்களில் பெரிதாக பங்கு இல்லை என்றாலும் வெளியே சொல்ல முடியாத ஒரு காரணத்தால் ஆன்னா குற்றத்தை தான் செய்ததாக ஒப்புக்கொள்கிறாள். அந்த காரணம் என்னவென்று அறிந்தவன் இந்தச் சிறுவன் மட்டுமே. 

மிக அழகான காட்சி அமைப்புகள், நிர்வாணத்தை அழகாக படமாக்கியிருக்கும் விதம், ஆர்பாட்டமில்லாமல் அமைதியாக நகரும் படம், நேரான கேமராக்கோணம் என யதார்தத்திற்கு வெகு அருகில் நிற்கிறது படம். இரண்டு குழந்தைகளின் தாயான கேட் நிர்வாண காட்சிகளில் துணிந்து நடித்திருக்கிறார். பெரும்பாலோனோர் வாழ்வில் இதுபோன்ற வெளியே சொல்ல முடியாத முதுபெண்டிரின் தொடர்பு பலருக்கு வாய்த்திருக்கிறது. எனக்கும் அந்த அனுபவம் இருக்கிறது. அதற்கான கட்டமைப்பினுள்ளும் புரிந்துணர்வின் எல்லைக்கோடுகளினுள்ளும் மிக இயல்பாய் நிகழும் அடிப்படை மனித தேவைகள் அது. சரியா தவறா என்ற கேள்விகளின் தேவைகளற்ற வாழ்வின் பகுதி அது. 

ஆன்னாவும் மிக கம்பீரமான, ரகசியங்களை சுமந்து திரியும் கண்களுடன் தன் அந்திம காலத்தில் அச்சிறுவனிடம் இருந்து வரும் ஒலிநாடாக்களை கேட்டு எழுதப்படிக்க பழகிக்கொள்கிறார். அவருக்கு எழுதப்படிக்க தெரியாதென்பது தான் அவரின் வாழ்வின் மிகப்பெரும் ரகசியம். அதை நீதிமன்ற விசாரனையின் போது இச்சிறுவன் மட்டும் கண்டுபிடித்து விடுகிறான். அவரால் படிக்க இயலாது என்பதால் ஒலிநாடாக்களில் இலக்கியங்களை, ஆந்தன் செகாவ் சிறுகதைகளை பதிவு செய்து அவருக்கு அனுப்புகிறான் நாய்கன், இப்பொழுது அவன் பெரும் வழக்கறிஞன். 

அந்த வார்த்தைகளை கொண்டே எழுதபடிக்க பயிலும் ஆன்னா அவனுக்கு அனுப்பும் கடிதங்களுக்கு ஒரு பதிலும் வருவதில்லை அவனிடம் இருந்து. அவளின் தண்டனைக்காலம் முடியும் தருவாயில் ஜெயில் வார்டன் அவனுக்கு தொலைபேசி அவளை வந்து கூட்டிசெல்லுமாறு சொல்கிறார். அதற்கு முத்தாய்ப்பாய் இருவரையும் ஒருமுறை சந்திக்க வைக்கிறார். தான் காதலித்து மகிழந்த சிறுவன் இன்று வளர்ந்து நிற்பதை கண்டு மகிழ்வுறூம் ஆன்னா, எல்லோரையும் போலவே அவனும் அவரை ஒரு போர்குற்றவாளியாக பார்க்கும் நிலைகண்டு மனம் வெதும்புகிறார். 

தான் எதிர்பார்க்கும் காதல் அவனிடம் இல்லை என்பது 20 வருட சிறை வாழ்க்கையைவிட கடினமான ஒன்றாக அவரை தாக்குகிறாது. அவன் திருமண வாழ்வும் சரியாக இல்லாமல் போனதன் காரணம் தானாக இருக்கலாம் என நினைத்து, விடுதலையாவதற்கு முதல் நாள் தற்கொலை செய்துகொள்கிறார். 

அதுவரை தங்களுக்கிடையில் இருந்த உறவை யாரிடமும் சொல்லாத நாயகன், தன் மகளிடம் சொல்ல ஆரம்பிக்கிறார், படம் முடிகிறது. 

முழுக்க முழுக்க கேட் வின்ஸ்லெட்டின் ஆட்சியில் படம் ஒரு நெகிழ்ச்சியான அனுபவமாக முடிகிறது. நிர்வாணமாக பார்த்த அதே கேட், வயதான தன் 55 வயதையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். தான் ஒரு எழுத்தறிவில்லாதவள் என்பதை வெளியே சொல்வதை காட்டிலும் சிறைத்தண்டனையே பரவாயில்லை என நினைக்கும் அவரின் பிடிவாதம், அம்மக்களுக்கேயான வெகுளித்தனத்தை காட்டுகிறது. 

சந்தர்ப்பமேற்படுத்திக்கொண்டாவது  படத்தை பார்த்து விடுங்கள். 

4 comments:

butterfly Surya said...

இப்படம் இன்னும் பார்க்கவில்லை நண்பா.

பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

நம்ப லிஸ்டையும் பாருங்க..

Unknown said...

வருகைக்கு நன்றி நண்பரே,

குடும்பத்துடன் பார்க்க வேண்டாம்.

:)

Unknown said...

ஹ்ம்ம்ம்ம் நல்லா இருக்கும் போலேயே....
டவுன்லோட் பண்ணிற வேண்டிதான்....

ராகவன் said...

இசைக்கு வந்தனம்,

ராகவன் இந்த பக்கம். அய்யனாரின் வலைப்பதிவில் உங்கள் பதிலை பார்த்து உங்கள் வலைப்பதிவிற்குள்..

ரீடர் பார்த்தேன். உங்கள் பதிவும் பார்த்தேன். கேட் வின்ஸ்லெட் உங்களை அதிகம் பாதித்திருக்கிறார். கேட் வின்ஸ்லெட்டின் இந்திய தனமான முகம் உங்களை அவள் பால் ஈர்த்திருக்க அநேக வாய்ப்புகள் உள்ளது. எனக்கு இந்த படத்தின் இசை நிரம்ப பிடித்தது, இசையமைப்பாளரின் பெயர் ஞாபகம் இல்லை. ஆனால் படத்தின் தண்மையை ஒட்டி அதுவே ஒரு கதை சொல்லியாக பயனிக்கும் அனுபவம் எனக்கு இதில் கிடைத்தது. இதில் கேட் வின்ஸ்லெட்டை தாண்டி நீங்கள் யோசிக்கவில்லையோ..என்று தோன்றுகிறது. ஒரு திறனாய்வாய் இல்லாமல், தோள் கண்டார் தோளே கண்டார் என்று அதன் கதை மற்றும் கதாநாயகி மட்டுமே பிரதானமாய்... ஆனாலும் உங்கள் எழுத்து நடை அழகாக தலைகுளித்தப் பெண்ணின் கூந்தல் கற்றைகளில் இருந்து சொட்டும் துளியாய் இயல்பாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்..

அன்புடன்
ராகவன்