Wednesday, March 4, 2009

Quentin Tarantino வாரம்

Sergio Leone விட்டுச்சென்றிருக்கும் கலைநீட்சி Quentin. இருவரது படங்களும் ஒரே சாயலில் அற்புதமான திரைஅனுபவங்களாக மிளிர்வது. Quentin உலகறிந்த இயக்குனர். Non-Linear,falshback, Distorted Chronology என பல வகைகளில் இவரது படங்கள் தனித்து நிற்கும். வன்முறையை கவித்துவத்துடன் சொல்லும் இவரது பாணி பல Cult  படைப்புகளை முன்னிறுத்தி அதன் நினைவுகளை நம் மனதில் ஓடச்செய்வது. 

இவரது படங்கள் இவரது படங்களில் இருந்தே கிளை கிளையாய் தொடங்கும். அதற்கான குறியீடுகள் படம் முழுவதும் நிறைந்திருக்கும். Pulp Fiction படம் பார்க்கும் போதே நமக்கு தெரிந்துவிடும் அடுத்து ஒரு படம் அதீத கத்தி பிரயோகத்தில் வரப்போகிறது என்று. Bruce Willis டார்ச்சர் சீன் பிற்பாடு Hostel என்ற படமாக வந்தது. அவர் எடுக்கும் கத்தியைக் கொண்டு Kill Bill 1, 2 வந்தது. Kill Billkக்கு முன்பிருந்தே Bruce Lee மீதான Quentinனின் காதலை தெரிந்து கொள்ளலாம். Pulp Fictionனில் Bruce Willis, Bruce Leeன் படம் பார்த்துக் கொண்டிருப்பார். 

Kill Billல் நாயகியின் மஞ்சள் வண்ண உடை, Bruce Lee - Enter The Dragonனில் பயன்படுத்திய அதே உடை. இப்படி பல Cult movies inspiration  இவரது படங்களில் இருக்கும். எனினும் Sergio Leone'ன் தாக்கம் பிரேமுக்கு பிரேம் தெரியும். அசாத்திய திறமை படைத்த இயக்குனர். வன்முறை, பழிவாங்கல், Profiling என இவரது படங்களுக்கென ஒரு தனி ரசிகர் வட்டம் உருவாகிவிட்டது. Pulp Fiction, Kill Bill 1 எத்தனை முறை பார்த்தாலும் மனதை அள்ளும். 

கதை புத்தகம் போல Chapter wise  கதை சொல்லும் இவரது பாணி மிகப்பிரசித்தம். இசைக்கென தனிக்கவனம் இவரது படங்களில் இருக்கும். Pulp Fiction தீம் மியூசிக் Evergreen Favorite.  இவரது படங்களுக்கான ஊற்றூக்கண் இன்னமும் Pulp Fiction தான் என எனக்கு தோன்றுகிறது. இவர் தயாரிக்கும் படங்கள் பெரும்பாலும் இவர் சாயலையே கொண்டிருக்கும். உதாரணம் Hostel, Hell Ride. 

Quentin படங்கள் மூன்று பார்த்தாகிவிட்டது. பட்டியல்

1. Pulp Fiction
2. Kill Bill 1
3. Kill Bill 2. 
4. Resrvoir Dogs
5. Death Roof

Reservoir Dogs downloaded but not seen yet. Death Roof is getting downloaded. விமரிசனத்தை எங்கிருந்து ஆரம்பிக்கலாம் எனத்தெரியவில்லை. Reservoice Dogs பார்த்துவிட்டு ஆரம்பித்தால் சரியாக இருக்கும். சரி, குவென்டனின் Non-Linear பாணியில் Kill Bill ல் ஆரம்பித்து Reservoir Dogsல் முடிக்கிறேன். அதற்கு நடுவில் அவரது மற்ற படங்கள் பார்க்க நேர்ந்தால் The Chronology will be distorted. :) 

6 comments:

Anonymous said...

Death proof is a B-grade movie directed by a A-grade director. I didn't like the movie. Reservoir dogs and kill bill are my fav QT's movies

கே.என்.சிவராமன் said...

இசை,

ஒவ்வொரு வாரமும் இப்படி இயக்குநரின் வாரமாக மாற்றுங்கள். இந்த ஐடியா நன்றாக இருக்கிறது. இந்த தேதியில், இந்த இடத்தில், இந்த பெற்றோருக்கு மகனாக/மகளாக பிறந்தார் என்று ஆரம்பிக்காமல், அவரது படக் காட்சிகளை வைத்து முன்னுரை எழுதியிருப்பது ஆவலை அதிகரிக்கிறது.

நண்பா, சோம்பல்படாமல் எழுதுங்கள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Unknown said...

RD இன்னமும் பார்க்க வில்லை. KB Cult movie. KB1 மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படைப்பு.

நாளை முதல் திரைப்பார்வையை பதிவிடுகிறேன்.

Unknown said...

//நண்பா, சோம்பல்படாமல் எழுதுங்கள்//

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.. என்னளவில் உண்மையாக முயற்சிக்கிறேன். படைப்புகள் நம்ம்மிது ஏற்படுத்தும் தாக்கத்தினை கோர்வையாக எழுத்தில் வடிப்பது ஆயாசத்தை தருவதாக உள்ளது.

எனினும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறேன். நாளை முதல் பதிப்பிக்கிறேன்.

Anonymous said...

I started liking Quentin's movies from 'KILL BILL',for his screen play innovations.You have written about his films nicely.Thank you.

sanewar said...

reservoir dogs is much better movie than many of his other movies, next only to pulp fiction, it is slightly inspired from rashoman, which is showing an incident , just by explaining it via the characters and let the viewers what could ve happened. However RD is little different,here the characterisation plays an important role, all the characters never moves away from what he was supposed to be,their characters are explained right in the very first scene itself, the rest of the story is about how they react to the situation, which was exceptionally handled,with brief flashbacks, which helps to make the narration believable in latter stages. Happy to see a lot of tarantino fans in tamil nadu.