Saturday, March 14, 2009

QT வாரம் - A short take on his works

ஒரு புள்ளியை 360டிகிரியாக பகுக்க வாய்ப்பிருந்தும், புள்ளியை புள்ளியாக மட்டுமே பார்க்கும் தட்டையான மனப்போக்கு பல படைப்பாளிகளுக்கு இருக்கிறது. வேறுகோணத்தில் பார்க்கமுற்படுபவர்களை மனநிலை பிறழ்ந்தவன் என சமுதாயம் முத்திரை குத்தும். நாள்முழுதும் நடக்கும் நிகழ்ச்சிகளை மனது அட்டவணைப்படுத்துகையில் சில காட்சிகள் முன்னுக்கு பின்னாக பதியும், காலக்குழப்பம், காட்சிக்குழப்பம் என ஒரு தெளிவான அட்டவணை அமைய சற்று நேரம் எடுத்துக்கொள்ளும். 

ஒரு தேர்ந்த புதிரைப்போல மிகுந்த ஆவலை நம்முள் கிளர்த்தும் திறன் கொண்டவை கு.ட’வின் படைப்புகள். திரைமொழி அரிச்சுவட்டில் பல புதிய வார்த்தைகளை புகுத்திய பெருமை இவருக்கு உண்டு. தன் படைப்புகளுக்கென கட்டமைக்கப்பட்ட படிமங்களுடனே ஒவ்வொரு புதுமுயற்சியையும் தருவதால், பழைய மொந்தை பழைய கள் என ஒதுக்கிவிட முடியாது. 

எடுத்துக்காட்டாக: 1. நீங்கள் கள் குடிக்க செல்கிறீர்கள்: அடந்த பனங்காடு, நெடிய பனை மரம், பள பள கத்தி, உச்சி வெயில், ஒற்றையடி பாதை. கள் குடித்தாகிவிட்டது. 
2. நீங்கள் கள் குடிக்க செல்கிறீர்கள்: வெட்டவெளி, அங்கொன்றும் இங்கொன்றூமாக பனை, ஒரு அழகான பெண் கள் விற்கிறாள், அவளது அண்ணன் மரமேறி. அவள் கண்ணும் கத்தியும் ஒரே பளபளப்பில் இருக்கிறது. ஒற்றைப்பனைக்கு பக்கத்தில் ரெட்டை பனையாக அவள் அண்ணன். நீங்கள் கள்’ குடிக்கிறீர்கள். 

கள் குடிக்கும் ஒரே செயல்- வெவ்வேறு அனுபவங்கள். வெவ்வேறு படிமங்கள். இது ஒருவகையான படைப்பாளுமை. 

மற்றொருவிதம் - நீங்கள் கள், சாராயம், பப் என மூன்று விதமான இடங்களுக்கு செல்கிறீர்கள். ஆனால் அந்த இடங்களுக்கென சில படிமங்கள் சமைந்திருக்கிறது. கள்ளுக்கடை மொந்தை சாராய்க்கடையின் பக்கம் விற்கும் கூழ் போல தெரிகிறது. சாராயக்கடையின் உள்ளே இருக்கும் அரைகுறை ஆடை சுவரொட்டி Pubல் இருக்கும் Hip Gal போலவே இருக்கிறது. அந்த Hip Gal கள்ளுக்கடை பனைமரத்தின் தங்கை போல இருக்கிறாள். நீங்கள் கள் குடிக்கிறீர்கள், சாராயம் அடிக்கிறீர்கள், and chilling out @ the pub. 

மப்பில் ஒரு கலவையான அனுபவம் எல்லாம் சேர்ந்த ஒன்றாக உங்கள் போதையை கூட்டுகிறது. கு.டா’வின் திரைப்படைப்புகள் மேற்கூறிய வகையை சார்ந்தது. படிமங்கள் சமைக்கப்பட்டு, யுக்திகள் நிறுவப்பட்ட ஒரு திரையில் கதைவேறு, களம் வேறு, அனுபவம் வேறு. 

அடிப்படை யுக்திகள்:

1. முன்பின்னாக கதை சொல்வது. படத்தின் முடிவில் உயிருடன் இருக்கும் பாத்திரம் படத்தின் இடையிலேயே உயிரை விட்டுவிட்டு இருக்கும். (Pulp Fiction)
2.  ஒரு படைப்பிற்கும் அடுத்த படைப்பிற்கும் படிமங்களின் மூலம் தொடர்பு ஏற்படுத்துவது. (Pulp Fiction'ல் வரும் குகூனா பர்கரின் விளம்பர மாடல் Death Proofன் கதாநாயகி Julia)
3. பெண்களின் கால்கள், பாதம், விரல்களின் மீதான அதீத மோகம். நீளமான பாதங்கள், விரல்களின் மீதான விருப்பம் அனைத்து படங்களிளும் இருக்கிறது. 
4. பெண்களே இல்லாத திரைப்படம்- Reservoir Dogs - அதிகபட்ச பெண் பாத்திரங்களை கொண்ட Death Proof என முரண்களில் பயணிப்பது. 
5. வன்முறையை சிலாகித்து வடிக்கும், காமிக்ஸ் மனப்பான்மை. முதல் படத்தில் இருந்து தொடரும் யுக்தி இது. 
6. கார்களின் மீதான் அதீத விருப்பம். பாத்திரங்கள் பேசியபடியே நெடுந்தூரம் செல்லும் கார்பயணங்கள் அதிகமாக காணக்கிடைக்கும். 
7. முன்பே கூறீயது போல சாகச நாயகர்கள், காமிக்ஸ் வீரர்களின் போஸ்டர்கள் தனது படைப்பின் பெரும்பாலான இடங்களில் வெளியே தெரியும். 
8. ஒருவர் பேசும்போது, பேசுபவரி விட்டு கவனிப்பவரை காண்பிப்பது - God Father இதற்கு எதிர்மறையாக இருக்கும். 
9. மிகவும் நீளமான காட்சிகள் -5நிமிடம் 8 நிமிடம் என நீளும் கதையாடல்கள். 
10. கதைக்களத்தில் நம்மை மெதுமெதுவாக மூழ்கடிக்கும் அவசரமற்ற கதைநகர்த்தல். என்ன நடக்கிறது என புரிந்து கொள்ளவே அரைமணி நேரமாகிவிடுகிறது Death Proofல். இது Martin Scorcese பாணி-அவரின் The Good Fellas, Taxi Driver, Casino, Mean Streets  பார்த்தவர்களுக்கு புரியும். புதைகுழியில் அமிழும் ஆட்டுக்குட்டியை போல கதை மெதுவாய் மெதுவாய் நமை உள்ளிழுக்கும். 
11. முழுக்க முழுக்க பேண்டசி அல்லது பழிவாங்கல் அல்லது திருட்டு சார்ந்த படங்கள்.
12. அடிக்கடி கருப்பு வெள்ளைக்கு மாறும் வண்ணவிளையாட்டு. 
13. மகா கெட்டவார்த்தைகளை தண்ணி குடித்து தாவு தீர்க்கும் கதாபாத்திரங்கள். Its fuckin good!
14. சில நடிகர்களை திரும்ப திரும்ப உபயோகிப்பது - Samuel Jackson (Pulp fiction, Jackie Brown, Kill Bill-small one minute role, Inglorious Bastards - Pre production , Uma Truman- Pulp fiction, Kill Bill-1,2)
15. பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் படங்கள் (Kill Bill, Jackie Brown, Death Proof). 
16. கிட்டக்கோணத்தில் பாகங்களை காட்டுவது - உதடு, கை, கால், பாதம், விரல், கண்கள். 
17. கேமராக்கோணம் என பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் மிகவும் இயல்பான கோணங்கள் ஆனால் பாத்திரங்கள் வித்தியாசமான கோணங்களில் தென்படும். 
18. பழைய இசையின் மீதான் அதீத விருப்பம். எப்போழுதும் கார், பப்’களில் வழியும் jAZZ, Country types. 
20. கூர்மையான வசனம், இயல்பான மொழியில் பக்கம் பக்கமாக பேசும் பாத்திரங்கள். 

இப்படி பட்டியலிட்ட பின்பு திரைப்படங்கள் இவற்றின் தொகுதியாகவே தெரிவதால் - ஆழமாக செல்ல விரும்பவில்லை. 

படைப்பாளுமை மற்றும் திரைமொழி, யுக்தி இவற்றின் அடைப்படையில் பட்டியலிட்டால் - Pulp Fiction, Kill Bill 1-2, Resrvior Dogs, Jackie Brown, Death Proof. 

Pulp Fiction: ஒரு ரவுடி, அவன் கீழ் இரண்டு கையாள், அவன் மனைவி மற்றும் ஒரு குத்து சண்டை வீரன் தொடர்பற்ற இவர்களுக்கிடையில் ஓடும் வெவ்வேறு கதைகள் படத்தின் வெவ்வேறு கட்டங்களில் முடிவுற்று, தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்கும் படம் இது. அபாரமான படம். ஒருவகையான மைல்கல். திரைப்பட IMBD தர வரிசையில் 5 இடத்தில் இருக்கும்படம். திரையுக்திகளுக்காகவே ஒருபடம் இத்துனை தூரம் புகழ்பெற்றிருப்பது வியப்பிற்குறியது என்றாலும், மிகவும் ரசிக்கத்தக்க படைப்பு. Pulp Fiction Framed Art Print

Kill Bill 1-2: காட் பாதர் பாணியில் இரண்டாம் பாகத்தில் கதைக்கான பின்புலனும், முதல் பாகத்தில் அரைவாசி கதையும் சொல்லப்படும் மிகவும் ஆர்வத்திற்குரிய படம். தனது மண ஒத்திகை கோலத்தில் கொல்லப்படும் ஒரு பெண், தப்பி பிழைத்து தன்னை கொன்றவர்களை பழிவாங்கும் கதை.Kill Bill Vol. 1 Poster பழிவாங்கல் ஒரு கலையாக, மிக மிக அழகாக சொல்லப்பட்டிருக்கும் படம். அறுந்து விழும் கால்கள் கைகள் தலைகள், ரத்தம், கத்தி என படம் ஒருவித வன்முறை உலகில் நமை ஆழ்த்துகிறது. 

இரண்டாம் பாகத்தில் அந்த மணப்பெண் யார் எதற்காக கொல்கிறாள் என விரிகிறது. முதல் பாகத்தின் விறுவிறுப்போ, ஈர்ப்போ இந்த படத்தில் இல்லை, எனினும் பார்த்தாக வேண்டிய படம். 

Reservoir Dogs: கொள்ளையடிக்க போகும் ஒரு கூட்டம் போலிசிடம் மாட்டிக்கொள்கிறது. தப்பித்த அவர்கள் யார் துப்பு கொடுத்திருப்பார்கள் என ஒருவரை ஒருவர் சந்தேகப்படும், முழுக்க முழுக்க Reservoir Dogs Posterவசனத்தின் தயவில் நகரும் படம். இயக்குனரின் முதல் படம். நல்ல முயற்சி. 

Jackie Brown: துணிக்கடையில் வரும் Time Lapsing காட்சி மிகப் பிரசித்தம். நேர்மையான படம். இயக்குனரின் துடுக்குதனம் எதுவுமில்லாமல் தெள்ளிய நீரோடை படம்.Jackie Brown Mini Poster ரிவால்வர் ரீட்டா பாத்திரத்தில் தன் இளமைக்காலங்களில் கலக்கிய ஒரு நாயகியை, அவரின் 40களில் இந்த படத்திற்காக நடிக்க வைத்து இருப்பார். அவர் தான் ஜாக்கி பிரவுன். ரசிக்கத்தக்க படம். Samuel Jackson அருமையாக நடித்திருப்பார். 

Death Proof: எனக்கு பிடித்தது. நிறைய பேருக்கு பிடிக்காமலும் போகலாம். 1 மணி நேரம் ஒன்றுமே இல்லாமல் வெறும் வசனங்கள் ஒன்றிரண்டு நடனம் நிறைய பாடல் என செல்லும் படம், அதற்கப்புறம் முழுக்க முழுக்க ஒரு கார் சேசிங் படமாக மாறி விறுவிறுப்பாக முடிகிறது. பழைய GrindHouse நாயகிகளுக்கு சமர்ப்பணமாக எடுக்கப்பட்டது இந்தப்படம். Grindhouse -Death Proof Posterஒரு மணிநேரம் Julia வின் நீளமான அழகான கால்களை ரசித்து ரசித்து காட்டும் இயக்குனர், கார் விபத்தில் அந்த கால் மட்டும் துண்டாகி பறந்து சென்று நடுநிசி தார்ரோட்டில் விழுவதை அழகாக காட்டுவார், அதனேடு சில சதைத்துணுக்கு மற்றும் நரம்புகள். Heights!

மனதை உருக்கும் படங்கள் ஆயிரம் இருக்கிறது. வெவ்வேறு மொழிகளில், அவரவர் கலாச்சாரத்தை முன்வைத்து அவை பேசிச்செல்லும் கருத்துக்கள் ஆயிரம் இருக்கலாம். கு.டா’வின் படைப்புகள் அத்தகையன அல்ல. திரையுக்தி, ஒருவித அழகியல் வன்மம், அதிர்ச்சி எனும் பிரிவிகளில் தவிர்க்க முடியாத இயக்குனர். அவரின் அனைத்து படங்களையும் நீங்கள் ரசிக்கலாம். திரையனுபவத்தின் இன்னொரு பரிமாணம் Quentin Tarantion. Hats Off! 

4 comments:

sanewar said...

most special things about his films showing ordinary this in a cinematically different way , yet in a stylish way, i am a great fan tarantino since i saw reservoir dogs, and he never disappointed in any of his films, you can clearly see his stamp on all his films, with innovative shot making and long realistic conversational sequences, twisted screenplay , making different senses at different orders, bringing a humour out of the most serious charectar you would have ever thought and many more. He is like an inspiration to young film makers and instrumental in creating a new way of film making.

Unknown said...

நீங்கள் சொல்வது மிகவும் சரி.

நீண்ட காட்சி அமைப்பு Sergio and Scorsese அவர்களின் stronghold. இருந்தாலும் QT தன் வசனங்களால் அதை செதுக்குவார் மிக அருமையாக. RD முழுக்க முழுக்க வசனத்தை வைத்து நகரும் படைப்பு.
:)

எனக்கு நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் நான் பார்த்து ரசிப்பது Kill Bill 1. Uma O-Ren Ishi'யை தேடிப்போவதில் இருந்து 40நிமிடம் படம் அருமையோ அருமை.

நான் QTன் ரசிகன். வருகைக்கு நன்றி. :). மிகவும் சாதரண திரைப்படமும் திட்டமிட்ட யுக்திகளால் சுவையான அனுபவமாக மாறும் என்பதற்கு QT ஒரு நல்ல உதாரணம்.

ரவி said...

அருமையான பதிவு. மிஸ் பண்ணிட்டேனே ??

பாலா said...

பதிவுகள் மிகவும் அருமை....

இன்னும் ஜாக் ப்ரவுனி மட்டும் பார்க்கவில்லை, அதையும் பார்த்து விட வேண்டும்...

குவிண்டின், மார்டின் ஸ்கார்ஸிஸி போன்றோரின் படங்கள் தான் வித்யாசமான ஒரு காண்பனுபவத்தை கொடுக்கும். அழகாய் சொன்னிர்கள் "புதைகுழியில் அமிழும் ஆட்டுக்குட்டியை போல கதை மெதுவாய் மெதுவாய் நமை உள்ளிழுக்கும்".

வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் சேவை
- பாலா