Thursday, March 5, 2009

QT- வாரம். The Prelude.


திரைப்படம் என்பது கதை, திரைக்கதை, அறிமுகம் பாடல் என நேர்கோட்டில் செல்லும் பாடப்புத்தகம் அல்ல, இயக்குனரின் ஆளுமைக்கு ஏற்ப, மிக கவனமாக சிதைக்கப்பட்டு பார்வையாளனுக்கு ஒரு புதுவித அனுபவத்தை தர இயலும் என்பதை வெற்றிகரமாக நிரூபித்த இயக்குனர்கள் வரிசையில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் குவெண்டன்.


இவரை கவர்ந்த - பாதித்த இயக்குனர்கள், இத்தலியன், அமெரிக்க, மெக்ஸிகோ என கலவையான திரையுலக படைப்புகளை கண்ணுறும் வாய்ப்பு மற்றும் தன் பதின்ம வயதில் வாடகைத்திரைநூலகம் (Rental Video Library) ஒன்றில் வேலை பார்த்த அனுபவம் என அவருக்கான தளம் மிகவும் பரவலான, ஆழமான ஒன்றாக அமைந்துவிட்டது.


ரம்மி ஆடுவோர் பலரை பார்த்திருகலாம், அவர்கள் நேர்வரிசையில் கார்டுகளை வைத்திருக்க மாட்டார்கள் ஆனாலும் ஆட்டத்தை முடிப்பதற்கான அனைத்து கார்டும் அவர்கள் கையில் இருக்கும். Consciously Distorting  the Order to deceive the viewers.


உலகத்தை திருப்பிப்போடும் நெம்புகோல் திரைப்படங்கள் அல்ல அவரது. கொஞ்சம் கூர்கவனம் கொண்டவர்களுக்கானது,  சிறு மாய விளையாட்டின் மூலம் ஒருவித மயக்கத்தை உண்டுபண்ணும் பார்வை அனுபவம் அவ்வளவே. படத்தின் முடிவான செய்தி என்ன? ஒன்றுமில்லை. கதைகளை படிப்பதால் என்ன பயன்? பெரிதாக ஒன்றூமில்லை. ஒரு வாசிப்பனுபவம், அதுபோல இது ஒரு திரை அனுபவம். 


அரசியல் பார்வைகள் மற்றும் சமூக செய்திகள் அற்று ஒரு நிகழ்வின் வெவ்வேறு பரிமாணங்களை காட்டி அதில் பங்கு கொண்ட பாத்திரங்களின் அகபுற பாவனைகளை நமக்கு கோடிட்டு காட்டி, சில இடங்களில் நம்மையே யூகித்துகொள்ளச் செய்து தன் படைப்புகளை கட்டமைத்திருப்பார் குவெண்டன். 


எதையும் கோர்வையாக பார்ப்பது நம் மூளைக்கான வேலையை குறைக்கிறது. கவனத்தை குவிக்காமல் மனதை மென்மையாக்கும் படைப்புகள் ஒரு வகை. கொஞ்சம் ஆழமான பார்வையுடன், கவனத்தை சிதறவிடாமல் ஒரு குறுக்கெழுத்துப்புதிர் போன்ற படைப்பை சிலாகிப்பது மற்றொரு வகை. GenerationX தலைமுறைக்கு படம் எடுக்கும் இயக்குனர் குவெண்டன்.


இவருக்கும் முன்பிருதே அறிவியல் சார் Sci-Fi படங்கள் பிரபலம். தொழில்நுட்ப வளர்ச்சியின் பின் ஒளிந்துகொள்ளாமல், மிகவும் இயல்பாக ஆனால் மாறுபட்ட இயக்க விதிகளின் மூலம் படைப்பை செம்மை செய்பவர். முகத்திலடிக்கும் எடிட்டிங் இருக்கது, கேமரா கோணம் இம்சை பண்ணாது, மிகவும் நீளமான காட்சி அமைப்புகள் என மிகவும் பழைய யுக்திகளை புதுவிதமாக கையாண்டு தன் இருப்பபை நிலைநிறுத்துவார். 


தன்னை பாதித்த படங்களை தன் படங்களில் கோடிட்டு காட்டுவார், பாடல்களும் அப்படியே. காமிக்ஸ் வகையறா மீது அலாதி பிரியம். Kill Bill Vol 1 படத்தில் பத்து நிமிடத்திற்கும் மேலான ஒரு Chapter காமிக்ஸ் (ஜப்பானின் Anime / Manga) பாணியில் உருவாக்கியிருப்பார். அதே பாணியை கமல்ஹாசனின் ஆளவந்தான் படத்தில் காணலாம். அவரின் பெரும்பாலான நாயகர்கள் காமிக்ஸ் பிரியர்களாக இருபார்கள். 


Reservoir Dogs அவரது முதல் திரைமுயற்சி. Roshoman போலல்லாமல், The Dearted போலவும் அல்லாமல் சற்று வித்தியாசமாக வந்த திரைப்படம். வெற்றிப்படமல்ல மேலும் அவரது யுக்திகள் மிகவும் அடிப்படை நிலையில் இருப்பதால் அனாவசியத்திற்கு நீளமான காட்சியமைப்புகள் Sergio Leone'n சாயல், மற்றும் காட் பாதரின் பாதிப்பின்றி படத்தை நிறுவ எட்டுத்துக்கொண்ட கவனம் என குவெண்டனின் தரச்சான்று முத்திரைகள் தன் வரவை திரைஉலகிற்கு அறிவித்த படம், ஆனால் கவனித்தவர்கள் மிகச் சிலரே. 


kill Bill 1 போடும் முடிச்சுகளுக்கான விடையாய் இரண்டாம் பாகம் விரிய, இரண்டு பாகத்திற்கான குறிப்புகளும், பின்நோட்ட(flashback) காட்சிகளும் இரண்டு படத்திலும் விரவி நிற்கும். குவெண்டனின் இதுவரையிலான படங்களை பார்த்து அதன் யுக்திகளின் வேரைத்தேடி போனால், அவர் அதற்கான விதைகளை PulpFiction  என்ற மரத்தில் இருந்தே பறிக்கிறார். முதன் முதலாக இரண்டாம் உலகப்போரின் பின்புலத்தில் அவர் இயக்கும் படம் இந்த வருடம் வருகிறது, அதை எங்கனம் கையாண்டிருப்பார் என்பது ஒருவாறாக யூகிக்க முடிந்தாலும்-உங்களை போலே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். 


நீளமான காட்சியமைப்புகளை தன் கூரிய வசனங்கள் கொண்டு மெருகூட்டுவது இவரது பாணி. குத்து வசங்கள் அல்ல- கூரிய வசனங்கள். ஒவ்வொரு பாத்திரமும் மூட்டை மூட்டையாக கதைகளை சொல்லும், அதன் தேவையற்று திரைப்படத்திற்கு ஒரு துணையும் புரியாமல் பல கதைகளை இவரது பாத்திரங்கள் சொல்லும். அவை பெரும்பாலும் Beer Talk அல்லது Drive Talk அல்லது Buddies Talk  என இயல்பாய் இருக்கும். 


குரூரம் அலல்து Psychotic பாத்திரங்கள் ஒன்றாவது இவரது படங்களில் இருக்கிறது. எதிர்பார்க்காத சமயத்தில் குரூரத்தை படத்தில் நுழைப்பது இவரின் பிரபலமான யுக்தி. நல்லாத்தானே போய்ட்டு இருந்துச்சு என வடிவேல் பாணியில் கையை பிசையும் அல்லது வாயடைத்துப்போகச்செய்யும் குரூரத்தை இவரது பாத்திரங்கள் மிகவும் ரசனையுடன் நிகழ்த்தும், பெரும்பாலான இவரது பாத்திரங்கள் புனைப்பெயரிலேயே அழைக்கப்படும். கடைசிவரை நமக்கு பாத்திரங்களின் பெயர் தெரியாமல் Copper Head, Cotton Mouth, Black Mamba, Mr, Blonde, Mr White என புனைப்பெயர்களே மனதில் நிற்கும். நிற்க. 


இந்த விவரணைகள் இவரது படங்களை அலசுவதற்கான குறிப்புகள் அல்லது Prelude. ஏற்கனவே சொல்லியது போல், குவெண்டன் இயக்கியது 6 படங்கள் இதுவரை. 

1. Reservoir Dogs

2. Pulp Fiction

3. Jackie Brown

4. Kill Bill 1 @ 2

5. Death Proof


Jackie Brown & Death Proof இன்னமும் பார்க்க வேண்டி இருக்கிறது. அதனால் நான் முதன் முதல் பார்த்த Kill Bill 1ல் இருந்து அலச ஆரம்பிக்கிறேன். இதேயே தான் சென்றமுறையும் சொன்னேனா? 


சொல்ல மறந்தது திடீரென கருப்பு வெள்ளைக்கு மாறும் இவரது மற்றொரு பாணி. மிகமிக கிட்டக் கோணம் (Full Close up) இவரது விருப்பம். கை, கால், விரல்கள், பிய்ந்த உதடு, அறுந்த காது என கிட்டக்கோணத்தில் கவனத்தை கவர்வார். இனி படத்தை பார்க்கலாம். 


ஒரு ஊரில் ஒரு கல்யாணம்..... Chapter 1. அடுத்த பதிவில். 

6 comments:

பாலா said...

அருமையா எழுதறீங்க நண்பா..! உங்களை கவனிக்காம விட்டுட்டனே..! :-(

QT எனக்கும் ரொம்ப பிடித்தவர். Jakie Brown பார்த்துட்டீங்களா? (அடுத்த பதிவில் பார்த்துட்டதுபோலதான் தெரியுது).

வாழ்த்துகள் நண்பரே..!

Unknown said...

பாலா, வருகைக்கு நன்றி.

JB பார்த்தாகிவிட்டது.

வாழ்த்துக்களுக்கு மறுபடி ஒரு நன்றி.

மீண்டும் சந்திப்போம்.

Anonymous said...

jackie brown மெட்ராஸ்லே எங்கே கிடைக்கும்.

Unknown said...

சாய்,

சென்னையில் எங்கே கிடைக்கும் எனத் தெரியவில்லை.

சினிமா பாரடிசோவில் கேட்டுப்பாருங்கள்.

நான் எப்போதுமே தரவிறக்கம்(Download) செய்து தான் பழக்கம். பெரும்பாலான திரைப்படங்கள் அங்கு மட்டும் தான் கிடைக்கும் எனவே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

பாலா said...

டவுன்லோட் செய்யும்போது... உங்களுக்கு 'behind the scenes' பார்க்கும் வாய்ப்பு கிடைக்காதே..! :-(

ஜே.பி-யின் ஸ்பெசல் டிஸ்க் எடிசனில் ஏகப்பட்ட விசயங்களை இவங்க எல்லாம் பகிர்ந்துக்குவாங்க.

நான் டிவிடி வாங்கறதே.. இந்த விசயங்களுக்காகத்தான்.

Unknown said...

நீங்கள் சொல்வது மிகவும் சரி.

பார்த்து முடித்தபின் நமக்கென மிச்சமிருக்கும் ரகசியம் அது மட்டுமே. எந்த படைப்பையும் அந்த படைப்பாளி எப்படி உருவாக்கினான் என தெரியும்போது அந்த படைப்பின் மீதிருக்கும் பிரமிப்பு, காதல், ரகசியம் உடைபட்டுவிடுகிறது. Then it'll become a stereotype.

அதனால், பார்த்து முடித்த பின் காட்சிவாரியாக எப்படி எடுத்திருப்பான், எங்கே கத்திரி வெட்டு, எந்த கேமரா கோணம் என நமக்குள் ஒரு இயக்குனர் உயிர்பெற்றுவிட வேண்டும்.

Pulp Fiction, Kill Bill 1& 2 இரண்டையும் நான் மாதக்கணக்கில் அலசி தியானித்திருக்கிறேன்.

இயக்குனரின் பார்வையில் Behind the Scenes unfolds the secrets - இது ஒரு வகை.

நம் பார்வையில் we create the secrets and relive the making of the movie. இது ஒரு வகை.

எனக்கு இரண்டாம் வகை மிகவும் பிடித்த ஒன்று. QT படைப்பை நம்ம கேமராக்கோணம் வழியே ஓடவிட்டு பார்ப்போமே....:)

Your grip on the medium strengthens in this method. அப்பொழுதும் பிடிபடாமல் நமை அலைகழித்தால், இயக்குனரின் பார்வையை அறிந்து கொள்ளலாம். :)