Tuesday, August 18, 2009

The God Father vs The Shawshank Redemption

IMDBயின் அறிமுகம் 2004ல் ஆரம்பித்தது. Residential MBA என்பதால், மொத்த இரண்டு வருடங்களும் கல்லூரி வளாகத்தினுள்ளே கழிந்துவிட்டது, மேலும் அது Academy என்றே அழைக்கப்பட்டது-கல்லூரி அல்ல :). 360ல் - 300 மக்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் அல்லது Non-SouthIndians. விதவிதமான் கேரக்டர்கள்-இடுப்பிலிருந்து எப்போது விழுமோ என நாம் பயப்படும் அளவிற்கு பேண்ட் அணிவது, குளிக்காமல் சால்வையை போர்த்தி அலையும் பெண்கள், குறுந்தாடியுடன் Metallica, Fuck, Bitch என அடித்தொண்டையில் Machismo பிலிம் விடுவது என amazing line up.

இந்த கூட்டத்தில், சினிமா பீலா விடும் கூட்டத்தில் நானும் ஒரு அங்கம். அவ்வப்போது வித்தியாசமாக வந்து நம்மை நிலைகுலையச்செய்யும் தமிழ்படங்களை அவர்களுக்கு காட்டி இம்சையை கூட்டுவது என் வாடிக்கை. காதல், கஜினி, ராம், ஆட்டோகிராப் இதெல்லாம் அவர்களின் விருப்பப்படங்கள். அந்த திகு(திரைப்படக் குழு) சுவாதித்து, விவாதித்து அலசி ஆராய்ந்த படம் -The GodFather.

இந்த படத்தை Strategic Leadership பாடத்திற்கான Book Reviewல் சேர்க்கும் வரை எங்கள் அலும்பு ஓயவில்லை. அடிக்கடி அந்த படத்தின் வசனங்களை அள்ளிவிட்டு Corleone குடும்பத்து வாரிசாகவே பாவித்து இன்பம் காண்போம். I'll make an offer he cant refuse, அப்புறம் He is a reasonable Man அதில் மிகவும் வழமையானது. IMDB ஆரம்பித்த நாள் முதல், GF முதல் இடத்தை தக்க வைத்து நெடுநாள் ஆட்சி புரிந்தது.

திரைப்படங்கள் அறியப்பட்ட உலகின் அனைத்து பகுதியிலும் மிகவும் மதித்து போற்றப்படும் படைப்பு GF. மாபியா கட்டமைப்பை மிகநேர்த்தியாக சித்தரித்து, இத்தாலிய அமெரிக்கர்களின் வன்முறை பின்புலத்தை வெளிக்கொணர்ந்த திரைப்படம் அது. இப்படைப்பை கண்டபின்பு, FrancisFrod Coppolla, MarlonB, Al Pacino, Andy Garcia,Sofia என ஒரு பெரிய பட்டியலின் கலைபரிமாண பயணத்தை கண்டறியும் வாய்ப்பு கிடைத்தது.

ஓட்டுக்களால் மட்டுமின்றி, இயல்பாகவே எந்த ஒரு தேசத்தினர் பார்த்தாலும், மிகவும் ஒன்றி, அடையாளங்காணக்கூடிய கதை, நிகரில் தொழில்நுட்ப மேம்பாடு, மனதை உருக்கும் இத்தாலியன் இசை, அருமையான பாத்திர திறன்வெளிப்பாடு என GF ஒரு மைல்கல் திரைப்படம். மூன்று பாகங்களும் ஒருவித Cult Following, போதை, கலைவெறி, படைப்புடன் ஒன்றுதல் என ரசவாதத்தை நிகழ்த்தும் வீரியங்கொண்டது. இப்படத்தின் சாயல், பாதிப்பு, தழுவல் இல்லாத ரவுடியிச படங்களே இல்லை என துணிந்து கூறலாம். நிற்க.

1994 ஒரு மேஜிக் வருடம். Pulp Fiction, Forrest Gump மற்றும் The Shawshank Redemption என மூன்று திரைமைல்கல் படைப்புகள் வெளியான வருடம். Forrest Gump ன் எளிமைக்கும், Feel Good Factorக்கு முன்பு TSR வந்த இடம் தெரியவில்லை. வந்த வேகத்தில் படம் பெட்டிக்குள் முடங்கியது. ஒரு பக்கம் Pulp Fiction மறுபக்கம் FG, TSR வெளிச்சத்தில் மறைந்த மின்மினியாயிற்று.

அந்த படத்தின் அடியாழத்தை, அது சொல்ல வரும் கருத்தை, அதன் ஆன்மாவை அறிந்து கொள்ள உலகத்திற்கு நாள் பிடித்தது. எதிராளுமை படங்கள் மிகஎளிதில் மக்கள் மனதில் இடம்பிடித்து விடும். அதற்கான வசீகர வசன, காமிரா கோண வண்ண விளையாட்டை இயக்குனர்கள் நேர்த்தியாக நிகழ்த்தி விடுவார்கள். ”ரொம்ப நல்லவன்” வகை படைப்புகள் மனதில் இடம்பிடிக்க நாள் ஆகிறது. மெல்ல மெல்ல உலகின் பார்வை இந்த படத்தின் மீது விழ ஆரம்பித்தது.

தனிமனித மன உறுதியின், நம்பிக்கையின், சுதந்திரத்தின் தேவைக்கான அதன் தாகத்தை, அதை அடைவதற்காக அதுமேற்கொள்ளும் பயணத்தை, இடையினில் மனம் தளர்வுறாது அப்பயணத்தை தொடர்வதை, அப்பயணத்தினூடே மற்றவர்களுக்கு ஒரு படித்துறை என திகழ்வது என நேர்மையான வாழ்விற்கான அனைத்து காரணிகளையும் இந்த திரைப்படம் நமக்கு உணர்த்தி செல்கிறது.

சுதந்திரத்தின் அருமையை உணர்த்த சிறைச்சாலையை விட சிறந்த இடம் எது? அந்த சிறைசாலையின் ஒவ்வெரு செங்கல்லும் தன் வாழ்நாள் முழுதும் அவன் வெயரை சுவாசிக்கும் வகையில் ஒரு அழியாத சுவடை விட்டுச்செல்லும் கதைநாயகன், விடுதலை வேட்கை கொண்ட எந்த ஒருஆன்மாவுக்குமான எடுகோள். நம்பிக்கையின் வலிமையை, இதைவிட அழுத்தமாக சொல்லும் திரைப்படத்தை நான் இதுவரை கண்டதில்லை.

ஒவ்வெரு மயிற்காலையும் தனித்தனியாக பிடித்து ஆட்டி நம்மை நெக்குருகச் செய்யும் படைப்பு இது. எனவே தான் GF என்னும் உலகின் மிகவும் பிரபலமான ஒரு திரைஅனுபவத்தை பின்னுக்கு தள்ளி இன்று IMDBல் முன்னிலை வகிக்கிறது.

GFன் வெறிகொண்ட ரசிகன் என்ற வகையில் இது சற்று வருத்தமே என்றாலும், திரைமாணவனாக The Shwashank Redemption ஒரு மறக்க முடியா திரைபிரமிப்பு. விடுதலை தினங்களில் இப்பொழுது சின்னத்திரை ஊடகங்கள் இந்த படத்தை ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டது.

Tim Robins, MorganFreeman என்ற இரண்டு கரைகளுக்கிடையில் கதை ஆழ்ந்த மௌனத்துடன், எதிர்பார்க்கா இடத்தில் பேரருவி என வீழ்ந்து அதன் சாரலில் நம்மை நனையச் செய்து, Human Spirit என்னும் பேராழியில் நம்மை கரைக்கிறது.

உலகையே தன்வசம் கட்டி இழுத்த GF என்ற திரைபிரம்மாண்டத்தை முந்தி இப்படம் இடம்பிடித்திருப்பது, அப்படைப்புபில் நிகழும் முதன்மை பாத்திரத்தின் மன உறுதிக்கு அச்சாரமாக திகழ்கிறது. இனிஒரு GF, இனி ஒரு TSR வரும் வரை Let's bask in the glory of this twin pillers.