Wednesday, January 27, 2010

சிறந்த இயக்குநர் தான்.. ஆனா சிறந்த படமல்ல

விருதுகளின் காமெடியில் இது ஒரு Irony. சிறந்த இயக்குநர் இயக்கியது சிறந்த படமல்ல! சிறந்த படத்தை இயக்கியவர் சிறந்த இயக்குநருமல்ல. அவ்வ்வ்வ்வ்வ். உதாரணத்துக்கு உள்ளூர் பிட் ஒன்றை எடுத்துக்கொள்ளுவோம்.

பாலா இயக்கியது ஒரே படம் ‘ நான் கடவுள்’. கவனிக்கவும் அது அந்த ஆண்டிற்கான சிறந்த படம் அல்ல. ஆனால “நான் கடவுள்” படத்தை இயக்கிய பாலா சிறந்த இயக்குநர். அவர் இயக்கியது “நான் கடவுள்” மட்டுமே எனுப் பட்சத்தில், அந்த படத்தை சிறந்த முறையில் படைத்தளித்ததற்காக நம் பாலா’விற்கு சிறந்த இயக்குநர் விருது! ஆனால் அந்தப் படம் சிறந்த படமல்ல. :). மாப்பிள்ள அவருதான்.. ஆனா அவரு போட்டுருக்குற சட்டை என்னோடது.. .

மற்ற விருதுகள் எந்த விதமானாலும் அமையலாம். சில படைப்பில் கேமரா, இசை, பாடல் என எவரேனும் முன்னிலை பெறலாம், அது ஒப்புகொள்ள தக்கதே. ஆனால் இயக்குநரின் ஒரே பங்களிப்பு, இயக்கம். அவர் இயக்கியது ஒரே படம், அவர் தான் அந்த ஆண்டின் சிறந்த இயக்குநர்.. ஆனால் மக்களே அவர் இயக்கியது சிறந்த படமல்ல.. அவ்வாறெனின் எந்த படத்தை இயக்கியதற்காக அவருக்கு சிறந்த இயக்குநர் விருது?? :)

பாலா: என்ன வெச்சி காமெடி கீமெடி பண்ணலயே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

இப்பதிவில் பாலா ஒரு எச்சாம்பிள் மட்டுமே.. உலமெலாம் இதே கூத்துதான். இதை எதிர்த்து பல இயக்குநர்கள் throat saliva dryஆகிற அளவு கத்தி ஆயிற்று. இருந்தாலும் விருது கமிட்டிகளின் வருடாந்திர காமெடியில் இந்த மெனு கண்டிப்பாக இருக்கும், பல ஆண்டுகளில். சில நேரங்களில், சில இயக்குநர்கள் மட்டுமே, சிறந்த படத்தயும் இயக்கி, சிறந்த் இயக்குநர்களாகவும் அறியப்பட்டிருக்கிறார்கள்.

இதில் இரு வேறு தியரிகள் அடங்கும்:

1. படம் மொக்கை, ஆனா இயக்குநர் ஆஹா
2. படம் ஓஹோ, ஆனா இயக்குநர் ம்ஹீம்.. (நீ இன்னும் வளரனும் தம்பி)
3. இந்த வருடம் எவனும் மாட்டல.. safe zone'ல எவனையாவது அமுக்கி போடு. :)

நான் கடவுள் மொக்கை, பாலா ஆஹா... ஓசி டீக்குடித்து ஓட்டு போடும் முன் கமிட்டி.. இந்த வருடம் எவனும் மாட்டல.. safe zone'ல எவனையாவது அமுக்கி போடு. :)