Saturday, March 14, 2009

QT வாரம் - A short take on his works

ஒரு புள்ளியை 360டிகிரியாக பகுக்க வாய்ப்பிருந்தும், புள்ளியை புள்ளியாக மட்டுமே பார்க்கும் தட்டையான மனப்போக்கு பல படைப்பாளிகளுக்கு இருக்கிறது. வேறுகோணத்தில் பார்க்கமுற்படுபவர்களை மனநிலை பிறழ்ந்தவன் என சமுதாயம் முத்திரை குத்தும். நாள்முழுதும் நடக்கும் நிகழ்ச்சிகளை மனது அட்டவணைப்படுத்துகையில் சில காட்சிகள் முன்னுக்கு பின்னாக பதியும், காலக்குழப்பம், காட்சிக்குழப்பம் என ஒரு தெளிவான அட்டவணை அமைய சற்று நேரம் எடுத்துக்கொள்ளும். 

ஒரு தேர்ந்த புதிரைப்போல மிகுந்த ஆவலை நம்முள் கிளர்த்தும் திறன் கொண்டவை கு.ட’வின் படைப்புகள். திரைமொழி அரிச்சுவட்டில் பல புதிய வார்த்தைகளை புகுத்திய பெருமை இவருக்கு உண்டு. தன் படைப்புகளுக்கென கட்டமைக்கப்பட்ட படிமங்களுடனே ஒவ்வொரு புதுமுயற்சியையும் தருவதால், பழைய மொந்தை பழைய கள் என ஒதுக்கிவிட முடியாது. 

எடுத்துக்காட்டாக: 1. நீங்கள் கள் குடிக்க செல்கிறீர்கள்: அடந்த பனங்காடு, நெடிய பனை மரம், பள பள கத்தி, உச்சி வெயில், ஒற்றையடி பாதை. கள் குடித்தாகிவிட்டது. 
2. நீங்கள் கள் குடிக்க செல்கிறீர்கள்: வெட்டவெளி, அங்கொன்றும் இங்கொன்றூமாக பனை, ஒரு அழகான பெண் கள் விற்கிறாள், அவளது அண்ணன் மரமேறி. அவள் கண்ணும் கத்தியும் ஒரே பளபளப்பில் இருக்கிறது. ஒற்றைப்பனைக்கு பக்கத்தில் ரெட்டை பனையாக அவள் அண்ணன். நீங்கள் கள்’ குடிக்கிறீர்கள். 

கள் குடிக்கும் ஒரே செயல்- வெவ்வேறு அனுபவங்கள். வெவ்வேறு படிமங்கள். இது ஒருவகையான படைப்பாளுமை. 

மற்றொருவிதம் - நீங்கள் கள், சாராயம், பப் என மூன்று விதமான இடங்களுக்கு செல்கிறீர்கள். ஆனால் அந்த இடங்களுக்கென சில படிமங்கள் சமைந்திருக்கிறது. கள்ளுக்கடை மொந்தை சாராய்க்கடையின் பக்கம் விற்கும் கூழ் போல தெரிகிறது. சாராயக்கடையின் உள்ளே இருக்கும் அரைகுறை ஆடை சுவரொட்டி Pubல் இருக்கும் Hip Gal போலவே இருக்கிறது. அந்த Hip Gal கள்ளுக்கடை பனைமரத்தின் தங்கை போல இருக்கிறாள். நீங்கள் கள் குடிக்கிறீர்கள், சாராயம் அடிக்கிறீர்கள், and chilling out @ the pub. 

மப்பில் ஒரு கலவையான அனுபவம் எல்லாம் சேர்ந்த ஒன்றாக உங்கள் போதையை கூட்டுகிறது. கு.டா’வின் திரைப்படைப்புகள் மேற்கூறிய வகையை சார்ந்தது. படிமங்கள் சமைக்கப்பட்டு, யுக்திகள் நிறுவப்பட்ட ஒரு திரையில் கதைவேறு, களம் வேறு, அனுபவம் வேறு. 

அடிப்படை யுக்திகள்:

1. முன்பின்னாக கதை சொல்வது. படத்தின் முடிவில் உயிருடன் இருக்கும் பாத்திரம் படத்தின் இடையிலேயே உயிரை விட்டுவிட்டு இருக்கும். (Pulp Fiction)
2.  ஒரு படைப்பிற்கும் அடுத்த படைப்பிற்கும் படிமங்களின் மூலம் தொடர்பு ஏற்படுத்துவது. (Pulp Fiction'ல் வரும் குகூனா பர்கரின் விளம்பர மாடல் Death Proofன் கதாநாயகி Julia)
3. பெண்களின் கால்கள், பாதம், விரல்களின் மீதான அதீத மோகம். நீளமான பாதங்கள், விரல்களின் மீதான விருப்பம் அனைத்து படங்களிளும் இருக்கிறது. 
4. பெண்களே இல்லாத திரைப்படம்- Reservoir Dogs - அதிகபட்ச பெண் பாத்திரங்களை கொண்ட Death Proof என முரண்களில் பயணிப்பது. 
5. வன்முறையை சிலாகித்து வடிக்கும், காமிக்ஸ் மனப்பான்மை. முதல் படத்தில் இருந்து தொடரும் யுக்தி இது. 
6. கார்களின் மீதான் அதீத விருப்பம். பாத்திரங்கள் பேசியபடியே நெடுந்தூரம் செல்லும் கார்பயணங்கள் அதிகமாக காணக்கிடைக்கும். 
7. முன்பே கூறீயது போல சாகச நாயகர்கள், காமிக்ஸ் வீரர்களின் போஸ்டர்கள் தனது படைப்பின் பெரும்பாலான இடங்களில் வெளியே தெரியும். 
8. ஒருவர் பேசும்போது, பேசுபவரி விட்டு கவனிப்பவரை காண்பிப்பது - God Father இதற்கு எதிர்மறையாக இருக்கும். 
9. மிகவும் நீளமான காட்சிகள் -5நிமிடம் 8 நிமிடம் என நீளும் கதையாடல்கள். 
10. கதைக்களத்தில் நம்மை மெதுமெதுவாக மூழ்கடிக்கும் அவசரமற்ற கதைநகர்த்தல். என்ன நடக்கிறது என புரிந்து கொள்ளவே அரைமணி நேரமாகிவிடுகிறது Death Proofல். இது Martin Scorcese பாணி-அவரின் The Good Fellas, Taxi Driver, Casino, Mean Streets  பார்த்தவர்களுக்கு புரியும். புதைகுழியில் அமிழும் ஆட்டுக்குட்டியை போல கதை மெதுவாய் மெதுவாய் நமை உள்ளிழுக்கும். 
11. முழுக்க முழுக்க பேண்டசி அல்லது பழிவாங்கல் அல்லது திருட்டு சார்ந்த படங்கள்.
12. அடிக்கடி கருப்பு வெள்ளைக்கு மாறும் வண்ணவிளையாட்டு. 
13. மகா கெட்டவார்த்தைகளை தண்ணி குடித்து தாவு தீர்க்கும் கதாபாத்திரங்கள். Its fuckin good!
14. சில நடிகர்களை திரும்ப திரும்ப உபயோகிப்பது - Samuel Jackson (Pulp fiction, Jackie Brown, Kill Bill-small one minute role, Inglorious Bastards - Pre production , Uma Truman- Pulp fiction, Kill Bill-1,2)
15. பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் படங்கள் (Kill Bill, Jackie Brown, Death Proof). 
16. கிட்டக்கோணத்தில் பாகங்களை காட்டுவது - உதடு, கை, கால், பாதம், விரல், கண்கள். 
17. கேமராக்கோணம் என பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் மிகவும் இயல்பான கோணங்கள் ஆனால் பாத்திரங்கள் வித்தியாசமான கோணங்களில் தென்படும். 
18. பழைய இசையின் மீதான் அதீத விருப்பம். எப்போழுதும் கார், பப்’களில் வழியும் jAZZ, Country types. 
20. கூர்மையான வசனம், இயல்பான மொழியில் பக்கம் பக்கமாக பேசும் பாத்திரங்கள். 

இப்படி பட்டியலிட்ட பின்பு திரைப்படங்கள் இவற்றின் தொகுதியாகவே தெரிவதால் - ஆழமாக செல்ல விரும்பவில்லை. 

படைப்பாளுமை மற்றும் திரைமொழி, யுக்தி இவற்றின் அடைப்படையில் பட்டியலிட்டால் - Pulp Fiction, Kill Bill 1-2, Resrvior Dogs, Jackie Brown, Death Proof. 

Pulp Fiction: ஒரு ரவுடி, அவன் கீழ் இரண்டு கையாள், அவன் மனைவி மற்றும் ஒரு குத்து சண்டை வீரன் தொடர்பற்ற இவர்களுக்கிடையில் ஓடும் வெவ்வேறு கதைகள் படத்தின் வெவ்வேறு கட்டங்களில் முடிவுற்று, தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்கும் படம் இது. அபாரமான படம். ஒருவகையான மைல்கல். திரைப்பட IMBD தர வரிசையில் 5 இடத்தில் இருக்கும்படம். திரையுக்திகளுக்காகவே ஒருபடம் இத்துனை தூரம் புகழ்பெற்றிருப்பது வியப்பிற்குறியது என்றாலும், மிகவும் ரசிக்கத்தக்க படைப்பு. Pulp Fiction Framed Art Print

Kill Bill 1-2: காட் பாதர் பாணியில் இரண்டாம் பாகத்தில் கதைக்கான பின்புலனும், முதல் பாகத்தில் அரைவாசி கதையும் சொல்லப்படும் மிகவும் ஆர்வத்திற்குரிய படம். தனது மண ஒத்திகை கோலத்தில் கொல்லப்படும் ஒரு பெண், தப்பி பிழைத்து தன்னை கொன்றவர்களை பழிவாங்கும் கதை.Kill Bill Vol. 1 Poster பழிவாங்கல் ஒரு கலையாக, மிக மிக அழகாக சொல்லப்பட்டிருக்கும் படம். அறுந்து விழும் கால்கள் கைகள் தலைகள், ரத்தம், கத்தி என படம் ஒருவித வன்முறை உலகில் நமை ஆழ்த்துகிறது. 

இரண்டாம் பாகத்தில் அந்த மணப்பெண் யார் எதற்காக கொல்கிறாள் என விரிகிறது. முதல் பாகத்தின் விறுவிறுப்போ, ஈர்ப்போ இந்த படத்தில் இல்லை, எனினும் பார்த்தாக வேண்டிய படம். 

Reservoir Dogs: கொள்ளையடிக்க போகும் ஒரு கூட்டம் போலிசிடம் மாட்டிக்கொள்கிறது. தப்பித்த அவர்கள் யார் துப்பு கொடுத்திருப்பார்கள் என ஒருவரை ஒருவர் சந்தேகப்படும், முழுக்க முழுக்க Reservoir Dogs Posterவசனத்தின் தயவில் நகரும் படம். இயக்குனரின் முதல் படம். நல்ல முயற்சி. 

Jackie Brown: துணிக்கடையில் வரும் Time Lapsing காட்சி மிகப் பிரசித்தம். நேர்மையான படம். இயக்குனரின் துடுக்குதனம் எதுவுமில்லாமல் தெள்ளிய நீரோடை படம்.Jackie Brown Mini Poster ரிவால்வர் ரீட்டா பாத்திரத்தில் தன் இளமைக்காலங்களில் கலக்கிய ஒரு நாயகியை, அவரின் 40களில் இந்த படத்திற்காக நடிக்க வைத்து இருப்பார். அவர் தான் ஜாக்கி பிரவுன். ரசிக்கத்தக்க படம். Samuel Jackson அருமையாக நடித்திருப்பார். 

Death Proof: எனக்கு பிடித்தது. நிறைய பேருக்கு பிடிக்காமலும் போகலாம். 1 மணி நேரம் ஒன்றுமே இல்லாமல் வெறும் வசனங்கள் ஒன்றிரண்டு நடனம் நிறைய பாடல் என செல்லும் படம், அதற்கப்புறம் முழுக்க முழுக்க ஒரு கார் சேசிங் படமாக மாறி விறுவிறுப்பாக முடிகிறது. பழைய GrindHouse நாயகிகளுக்கு சமர்ப்பணமாக எடுக்கப்பட்டது இந்தப்படம். Grindhouse -Death Proof Posterஒரு மணிநேரம் Julia வின் நீளமான அழகான கால்களை ரசித்து ரசித்து காட்டும் இயக்குனர், கார் விபத்தில் அந்த கால் மட்டும் துண்டாகி பறந்து சென்று நடுநிசி தார்ரோட்டில் விழுவதை அழகாக காட்டுவார், அதனேடு சில சதைத்துணுக்கு மற்றும் நரம்புகள். Heights!

மனதை உருக்கும் படங்கள் ஆயிரம் இருக்கிறது. வெவ்வேறு மொழிகளில், அவரவர் கலாச்சாரத்தை முன்வைத்து அவை பேசிச்செல்லும் கருத்துக்கள் ஆயிரம் இருக்கலாம். கு.டா’வின் படைப்புகள் அத்தகையன அல்ல. திரையுக்தி, ஒருவித அழகியல் வன்மம், அதிர்ச்சி எனும் பிரிவிகளில் தவிர்க்க முடியாத இயக்குனர். அவரின் அனைத்து படங்களையும் நீங்கள் ரசிக்கலாம். திரையனுபவத்தின் இன்னொரு பரிமாணம் Quentin Tarantion. Hats Off! 

Thursday, March 5, 2009

QT- வாரம். The Prelude.


திரைப்படம் என்பது கதை, திரைக்கதை, அறிமுகம் பாடல் என நேர்கோட்டில் செல்லும் பாடப்புத்தகம் அல்ல, இயக்குனரின் ஆளுமைக்கு ஏற்ப, மிக கவனமாக சிதைக்கப்பட்டு பார்வையாளனுக்கு ஒரு புதுவித அனுபவத்தை தர இயலும் என்பதை வெற்றிகரமாக நிரூபித்த இயக்குனர்கள் வரிசையில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் குவெண்டன்.


இவரை கவர்ந்த - பாதித்த இயக்குனர்கள், இத்தலியன், அமெரிக்க, மெக்ஸிகோ என கலவையான திரையுலக படைப்புகளை கண்ணுறும் வாய்ப்பு மற்றும் தன் பதின்ம வயதில் வாடகைத்திரைநூலகம் (Rental Video Library) ஒன்றில் வேலை பார்த்த அனுபவம் என அவருக்கான தளம் மிகவும் பரவலான, ஆழமான ஒன்றாக அமைந்துவிட்டது.


ரம்மி ஆடுவோர் பலரை பார்த்திருகலாம், அவர்கள் நேர்வரிசையில் கார்டுகளை வைத்திருக்க மாட்டார்கள் ஆனாலும் ஆட்டத்தை முடிப்பதற்கான அனைத்து கார்டும் அவர்கள் கையில் இருக்கும். Consciously Distorting  the Order to deceive the viewers.


உலகத்தை திருப்பிப்போடும் நெம்புகோல் திரைப்படங்கள் அல்ல அவரது. கொஞ்சம் கூர்கவனம் கொண்டவர்களுக்கானது,  சிறு மாய விளையாட்டின் மூலம் ஒருவித மயக்கத்தை உண்டுபண்ணும் பார்வை அனுபவம் அவ்வளவே. படத்தின் முடிவான செய்தி என்ன? ஒன்றுமில்லை. கதைகளை படிப்பதால் என்ன பயன்? பெரிதாக ஒன்றூமில்லை. ஒரு வாசிப்பனுபவம், அதுபோல இது ஒரு திரை அனுபவம். 


அரசியல் பார்வைகள் மற்றும் சமூக செய்திகள் அற்று ஒரு நிகழ்வின் வெவ்வேறு பரிமாணங்களை காட்டி அதில் பங்கு கொண்ட பாத்திரங்களின் அகபுற பாவனைகளை நமக்கு கோடிட்டு காட்டி, சில இடங்களில் நம்மையே யூகித்துகொள்ளச் செய்து தன் படைப்புகளை கட்டமைத்திருப்பார் குவெண்டன். 


எதையும் கோர்வையாக பார்ப்பது நம் மூளைக்கான வேலையை குறைக்கிறது. கவனத்தை குவிக்காமல் மனதை மென்மையாக்கும் படைப்புகள் ஒரு வகை. கொஞ்சம் ஆழமான பார்வையுடன், கவனத்தை சிதறவிடாமல் ஒரு குறுக்கெழுத்துப்புதிர் போன்ற படைப்பை சிலாகிப்பது மற்றொரு வகை. GenerationX தலைமுறைக்கு படம் எடுக்கும் இயக்குனர் குவெண்டன்.


இவருக்கும் முன்பிருதே அறிவியல் சார் Sci-Fi படங்கள் பிரபலம். தொழில்நுட்ப வளர்ச்சியின் பின் ஒளிந்துகொள்ளாமல், மிகவும் இயல்பாக ஆனால் மாறுபட்ட இயக்க விதிகளின் மூலம் படைப்பை செம்மை செய்பவர். முகத்திலடிக்கும் எடிட்டிங் இருக்கது, கேமரா கோணம் இம்சை பண்ணாது, மிகவும் நீளமான காட்சி அமைப்புகள் என மிகவும் பழைய யுக்திகளை புதுவிதமாக கையாண்டு தன் இருப்பபை நிலைநிறுத்துவார். 


தன்னை பாதித்த படங்களை தன் படங்களில் கோடிட்டு காட்டுவார், பாடல்களும் அப்படியே. காமிக்ஸ் வகையறா மீது அலாதி பிரியம். Kill Bill Vol 1 படத்தில் பத்து நிமிடத்திற்கும் மேலான ஒரு Chapter காமிக்ஸ் (ஜப்பானின் Anime / Manga) பாணியில் உருவாக்கியிருப்பார். அதே பாணியை கமல்ஹாசனின் ஆளவந்தான் படத்தில் காணலாம். அவரின் பெரும்பாலான நாயகர்கள் காமிக்ஸ் பிரியர்களாக இருபார்கள். 


Reservoir Dogs அவரது முதல் திரைமுயற்சி. Roshoman போலல்லாமல், The Dearted போலவும் அல்லாமல் சற்று வித்தியாசமாக வந்த திரைப்படம். வெற்றிப்படமல்ல மேலும் அவரது யுக்திகள் மிகவும் அடிப்படை நிலையில் இருப்பதால் அனாவசியத்திற்கு நீளமான காட்சியமைப்புகள் Sergio Leone'n சாயல், மற்றும் காட் பாதரின் பாதிப்பின்றி படத்தை நிறுவ எட்டுத்துக்கொண்ட கவனம் என குவெண்டனின் தரச்சான்று முத்திரைகள் தன் வரவை திரைஉலகிற்கு அறிவித்த படம், ஆனால் கவனித்தவர்கள் மிகச் சிலரே. 


kill Bill 1 போடும் முடிச்சுகளுக்கான விடையாய் இரண்டாம் பாகம் விரிய, இரண்டு பாகத்திற்கான குறிப்புகளும், பின்நோட்ட(flashback) காட்சிகளும் இரண்டு படத்திலும் விரவி நிற்கும். குவெண்டனின் இதுவரையிலான படங்களை பார்த்து அதன் யுக்திகளின் வேரைத்தேடி போனால், அவர் அதற்கான விதைகளை PulpFiction  என்ற மரத்தில் இருந்தே பறிக்கிறார். முதன் முதலாக இரண்டாம் உலகப்போரின் பின்புலத்தில் அவர் இயக்கும் படம் இந்த வருடம் வருகிறது, அதை எங்கனம் கையாண்டிருப்பார் என்பது ஒருவாறாக யூகிக்க முடிந்தாலும்-உங்களை போலே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். 


நீளமான காட்சியமைப்புகளை தன் கூரிய வசனங்கள் கொண்டு மெருகூட்டுவது இவரது பாணி. குத்து வசங்கள் அல்ல- கூரிய வசனங்கள். ஒவ்வொரு பாத்திரமும் மூட்டை மூட்டையாக கதைகளை சொல்லும், அதன் தேவையற்று திரைப்படத்திற்கு ஒரு துணையும் புரியாமல் பல கதைகளை இவரது பாத்திரங்கள் சொல்லும். அவை பெரும்பாலும் Beer Talk அல்லது Drive Talk அல்லது Buddies Talk  என இயல்பாய் இருக்கும். 


குரூரம் அலல்து Psychotic பாத்திரங்கள் ஒன்றாவது இவரது படங்களில் இருக்கிறது. எதிர்பார்க்காத சமயத்தில் குரூரத்தை படத்தில் நுழைப்பது இவரின் பிரபலமான யுக்தி. நல்லாத்தானே போய்ட்டு இருந்துச்சு என வடிவேல் பாணியில் கையை பிசையும் அல்லது வாயடைத்துப்போகச்செய்யும் குரூரத்தை இவரது பாத்திரங்கள் மிகவும் ரசனையுடன் நிகழ்த்தும், பெரும்பாலான இவரது பாத்திரங்கள் புனைப்பெயரிலேயே அழைக்கப்படும். கடைசிவரை நமக்கு பாத்திரங்களின் பெயர் தெரியாமல் Copper Head, Cotton Mouth, Black Mamba, Mr, Blonde, Mr White என புனைப்பெயர்களே மனதில் நிற்கும். நிற்க. 


இந்த விவரணைகள் இவரது படங்களை அலசுவதற்கான குறிப்புகள் அல்லது Prelude. ஏற்கனவே சொல்லியது போல், குவெண்டன் இயக்கியது 6 படங்கள் இதுவரை. 

1. Reservoir Dogs

2. Pulp Fiction

3. Jackie Brown

4. Kill Bill 1 @ 2

5. Death Proof


Jackie Brown & Death Proof இன்னமும் பார்க்க வேண்டி இருக்கிறது. அதனால் நான் முதன் முதல் பார்த்த Kill Bill 1ல் இருந்து அலச ஆரம்பிக்கிறேன். இதேயே தான் சென்றமுறையும் சொன்னேனா? 


சொல்ல மறந்தது திடீரென கருப்பு வெள்ளைக்கு மாறும் இவரது மற்றொரு பாணி. மிகமிக கிட்டக் கோணம் (Full Close up) இவரது விருப்பம். கை, கால், விரல்கள், பிய்ந்த உதடு, அறுந்த காது என கிட்டக்கோணத்தில் கவனத்தை கவர்வார். இனி படத்தை பார்க்கலாம். 


ஒரு ஊரில் ஒரு கல்யாணம்..... Chapter 1. அடுத்த பதிவில். 

Wednesday, March 4, 2009

Quentin Tarantino வாரம்

Sergio Leone விட்டுச்சென்றிருக்கும் கலைநீட்சி Quentin. இருவரது படங்களும் ஒரே சாயலில் அற்புதமான திரைஅனுபவங்களாக மிளிர்வது. Quentin உலகறிந்த இயக்குனர். Non-Linear,falshback, Distorted Chronology என பல வகைகளில் இவரது படங்கள் தனித்து நிற்கும். வன்முறையை கவித்துவத்துடன் சொல்லும் இவரது பாணி பல Cult  படைப்புகளை முன்னிறுத்தி அதன் நினைவுகளை நம் மனதில் ஓடச்செய்வது. 

இவரது படங்கள் இவரது படங்களில் இருந்தே கிளை கிளையாய் தொடங்கும். அதற்கான குறியீடுகள் படம் முழுவதும் நிறைந்திருக்கும். Pulp Fiction படம் பார்க்கும் போதே நமக்கு தெரிந்துவிடும் அடுத்து ஒரு படம் அதீத கத்தி பிரயோகத்தில் வரப்போகிறது என்று. Bruce Willis டார்ச்சர் சீன் பிற்பாடு Hostel என்ற படமாக வந்தது. அவர் எடுக்கும் கத்தியைக் கொண்டு Kill Bill 1, 2 வந்தது. Kill Billkக்கு முன்பிருந்தே Bruce Lee மீதான Quentinனின் காதலை தெரிந்து கொள்ளலாம். Pulp Fictionனில் Bruce Willis, Bruce Leeன் படம் பார்த்துக் கொண்டிருப்பார். 

Kill Billல் நாயகியின் மஞ்சள் வண்ண உடை, Bruce Lee - Enter The Dragonனில் பயன்படுத்திய அதே உடை. இப்படி பல Cult movies inspiration  இவரது படங்களில் இருக்கும். எனினும் Sergio Leone'ன் தாக்கம் பிரேமுக்கு பிரேம் தெரியும். அசாத்திய திறமை படைத்த இயக்குனர். வன்முறை, பழிவாங்கல், Profiling என இவரது படங்களுக்கென ஒரு தனி ரசிகர் வட்டம் உருவாகிவிட்டது. Pulp Fiction, Kill Bill 1 எத்தனை முறை பார்த்தாலும் மனதை அள்ளும். 

கதை புத்தகம் போல Chapter wise  கதை சொல்லும் இவரது பாணி மிகப்பிரசித்தம். இசைக்கென தனிக்கவனம் இவரது படங்களில் இருக்கும். Pulp Fiction தீம் மியூசிக் Evergreen Favorite.  இவரது படங்களுக்கான ஊற்றூக்கண் இன்னமும் Pulp Fiction தான் என எனக்கு தோன்றுகிறது. இவர் தயாரிக்கும் படங்கள் பெரும்பாலும் இவர் சாயலையே கொண்டிருக்கும். உதாரணம் Hostel, Hell Ride. 

Quentin படங்கள் மூன்று பார்த்தாகிவிட்டது. பட்டியல்

1. Pulp Fiction
2. Kill Bill 1
3. Kill Bill 2. 
4. Resrvoir Dogs
5. Death Roof

Reservoir Dogs downloaded but not seen yet. Death Roof is getting downloaded. விமரிசனத்தை எங்கிருந்து ஆரம்பிக்கலாம் எனத்தெரியவில்லை. Reservoice Dogs பார்த்துவிட்டு ஆரம்பித்தால் சரியாக இருக்கும். சரி, குவென்டனின் Non-Linear பாணியில் Kill Bill ல் ஆரம்பித்து Reservoir Dogsல் முடிக்கிறேன். அதற்கு நடுவில் அவரது மற்ற படங்கள் பார்க்க நேர்ந்தால் The Chronology will be distorted. :) 

Sunday, March 1, 2009

கேட் வின்ஸ்லெட் ஆஸ்கர் வாங்கிய The Reader

பெண்மையும் அழகும் ஒரு சேர அமைந்த நடிகைகள் மிகவும் குறைவு. Zero Size எலும்புக்கூடுகளுக்கு மத்தியில் பெண்மையின் நளினத்துடன் இன்ரும் வலம் வரும் கேட் வின்ஸ்லெட் டைட்டனிக் திரைப்பட கால கட்டத்தில் இந்த உலகின் கனவு தேவதை. நான் +2 படித்த கால் கட்டத்தில் அனைவரின் கனவுகளிலும் கேட் தான். டிகாபிரியோ சிகை அலங்காரத்துடன் என்னுடைய ரோசுக்காக கிருஷ்ணகிரி அரசாங்க குடியிருப்பு வளாகத்தில் காத்திருப்பேன். அதன் நேர் எதிர் இருந்த செண்டரல் பானாவிஷன் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது டைட்டானிக். 

அந்த கேட் - அழகு தேவதை - தன் காதலன் துரத்தி வர, நிலக்கரி எரியும் எஞ்ஜின் ஒளியில் தன் ஸ்கர்ட் பறக்க தேவதை போல ஓடி வருவார் - ஒளி ஓவியம் அது. என்னுடைய Ever Green Romantic Scence அது. அதே கேட்- காலத்தின் மாற்றத்தை தன் உடலில் சுமந்து, அனுபவங்களை தன் நடிப்பில் வெளிக்காட்டி- மனதைத் தொடும் ஒரு கதையாடலை தன் திறமையினால் மெருகூட்டி ஆஸ்கர் விருது வாங்கிச் சென்றீருக்கிறார். புகழ்பெற்ற The Reader என்ற நாவலை தழுவி அதே பெயரில் படைக்கப்பட்ட இப்படம் நெகிழ்ச்சியான ஒரு திரை அனுபவத்தை தருகிறது. மேலும் இது ஒரு உண்மைக்கதையும் கூட. 


இரண்டாம் உலகப்போரைப்போல கலை, இலக்கிய, படைப்பு சார்ந்த தளங்களுக்கு ஊற்றுகண்ணாக இருந்த சம்பவம் எதுவும் இல்லை. 60 ஆண்டுகள் முடிந்தும் கதைகளும் சம்பவங்களும், சுயசரிதைகளும் அருவி போல பொழிந்துக்கொண்டிருக்கிறது. என்றும் வற்றாது என்றே நினைக்கிறேன், ஏனெனில் இழந்த ஒவ்வொரு உயிருக்கும் ஒரு கதை என்றாலும் இன்னமும் இலட்சங்கள் மீதமிருக்கிறது. 

அழகான Artistic Phorno'வாக ஆரம்பிக்கும் திரைப்படம் வெவ்வேறு திசைகளில் பயணித்து முடிவில் ஆழந்த மௌனத்துடன் நமை கட்டிப்போடுகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னான ஜெர்மனியில் பேருந்தின் நடத்துனராக பனிபுரியும் ஆன்னா ஸ்க்மிட்ஷ் என்ற நடுத்தர வயது பெண்மணி மாற்றும் அவள் சந்திக்கும் உடல் நலமற்ற 15 வயது பையனுக்குமான உறவு கைக்கிளை எனும் பொருந்தாக்காமமாக மாறி, பொருந்தும் காதலாக உருக்கொண்டு போரினால் அலைக்கழிந்த ஆன்மாக்களுக்கு வசந்தகாலமாகிறது. 

தன் பள்ளி பாடங்கள் மற்றும் வெவ்வேறு இலக்கியங்களை அவன் படிக்க அவள் கேட்க பின் கட்டிலில் களிநடனம் புரிய என நகரும் நாட்களின் இன்பம் வெகுநாள் நீடிப்பதில்லை. திடீரென ஆன்னா ஒரு நாள் காணாமல் போக, அதற்கான காரணம் தெரியாமலும் அல்லது தான் அவள் மேல் கொண்ட கோபம் காரணமாக இருக்கலாம் என்றூம் வருந்தும் அச்சிறூவன் பிற்பாடு பள்ளி முடிந்து சட்டக் கல்லூரியின் மாணவனாக சேர்கிறான். 

சட்ட பாடத்தின் நீட்சியாக நீதிமன்றத்துக்கு செல்லும் அவனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. போர்குற்றவாளியாக ஆன்னா விசாரணையில். அவளின் பிண்ணனி அப்போது தான் அவனுக்கு தெரியவருகிறது. போர்க்குற்றங்களில் பெரிதாக பங்கு இல்லை என்றாலும் வெளியே சொல்ல முடியாத ஒரு காரணத்தால் ஆன்னா குற்றத்தை தான் செய்ததாக ஒப்புக்கொள்கிறாள். அந்த காரணம் என்னவென்று அறிந்தவன் இந்தச் சிறுவன் மட்டுமே. 

மிக அழகான காட்சி அமைப்புகள், நிர்வாணத்தை அழகாக படமாக்கியிருக்கும் விதம், ஆர்பாட்டமில்லாமல் அமைதியாக நகரும் படம், நேரான கேமராக்கோணம் என யதார்தத்திற்கு வெகு அருகில் நிற்கிறது படம். இரண்டு குழந்தைகளின் தாயான கேட் நிர்வாண காட்சிகளில் துணிந்து நடித்திருக்கிறார். பெரும்பாலோனோர் வாழ்வில் இதுபோன்ற வெளியே சொல்ல முடியாத முதுபெண்டிரின் தொடர்பு பலருக்கு வாய்த்திருக்கிறது. எனக்கும் அந்த அனுபவம் இருக்கிறது. அதற்கான கட்டமைப்பினுள்ளும் புரிந்துணர்வின் எல்லைக்கோடுகளினுள்ளும் மிக இயல்பாய் நிகழும் அடிப்படை மனித தேவைகள் அது. சரியா தவறா என்ற கேள்விகளின் தேவைகளற்ற வாழ்வின் பகுதி அது. 

ஆன்னாவும் மிக கம்பீரமான, ரகசியங்களை சுமந்து திரியும் கண்களுடன் தன் அந்திம காலத்தில் அச்சிறுவனிடம் இருந்து வரும் ஒலிநாடாக்களை கேட்டு எழுதப்படிக்க பழகிக்கொள்கிறார். அவருக்கு எழுதப்படிக்க தெரியாதென்பது தான் அவரின் வாழ்வின் மிகப்பெரும் ரகசியம். அதை நீதிமன்ற விசாரனையின் போது இச்சிறுவன் மட்டும் கண்டுபிடித்து விடுகிறான். அவரால் படிக்க இயலாது என்பதால் ஒலிநாடாக்களில் இலக்கியங்களை, ஆந்தன் செகாவ் சிறுகதைகளை பதிவு செய்து அவருக்கு அனுப்புகிறான் நாய்கன், இப்பொழுது அவன் பெரும் வழக்கறிஞன். 

அந்த வார்த்தைகளை கொண்டே எழுதபடிக்க பயிலும் ஆன்னா அவனுக்கு அனுப்பும் கடிதங்களுக்கு ஒரு பதிலும் வருவதில்லை அவனிடம் இருந்து. அவளின் தண்டனைக்காலம் முடியும் தருவாயில் ஜெயில் வார்டன் அவனுக்கு தொலைபேசி அவளை வந்து கூட்டிசெல்லுமாறு சொல்கிறார். அதற்கு முத்தாய்ப்பாய் இருவரையும் ஒருமுறை சந்திக்க வைக்கிறார். தான் காதலித்து மகிழந்த சிறுவன் இன்று வளர்ந்து நிற்பதை கண்டு மகிழ்வுறூம் ஆன்னா, எல்லோரையும் போலவே அவனும் அவரை ஒரு போர்குற்றவாளியாக பார்க்கும் நிலைகண்டு மனம் வெதும்புகிறார். 

தான் எதிர்பார்க்கும் காதல் அவனிடம் இல்லை என்பது 20 வருட சிறை வாழ்க்கையைவிட கடினமான ஒன்றாக அவரை தாக்குகிறாது. அவன் திருமண வாழ்வும் சரியாக இல்லாமல் போனதன் காரணம் தானாக இருக்கலாம் என நினைத்து, விடுதலையாவதற்கு முதல் நாள் தற்கொலை செய்துகொள்கிறார். 

அதுவரை தங்களுக்கிடையில் இருந்த உறவை யாரிடமும் சொல்லாத நாயகன், தன் மகளிடம் சொல்ல ஆரம்பிக்கிறார், படம் முடிகிறது. 

முழுக்க முழுக்க கேட் வின்ஸ்லெட்டின் ஆட்சியில் படம் ஒரு நெகிழ்ச்சியான அனுபவமாக முடிகிறது. நிர்வாணமாக பார்த்த அதே கேட், வயதான தன் 55 வயதையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். தான் ஒரு எழுத்தறிவில்லாதவள் என்பதை வெளியே சொல்வதை காட்டிலும் சிறைத்தண்டனையே பரவாயில்லை என நினைக்கும் அவரின் பிடிவாதம், அம்மக்களுக்கேயான வெகுளித்தனத்தை காட்டுகிறது. 

சந்தர்ப்பமேற்படுத்திக்கொண்டாவது  படத்தை பார்த்து விடுங்கள்.