Friday, February 12, 2010

கோவா- ஹோமோ கேள்விகள்.

இரண்டு ஆண்களுக்கிடையில் பாலியல் உறவு சாத்தியம் அல்லது அவர்களுக்கான காதல், பொறாமை இருக்கும் என்பதையே அறியாத கிராம பெண்களுடன் கோவா திரைப்படத்திற்கு சென்றுவிட்டு, சம்பத்-அர்விந்த் காட்சிகளில் நெளிய வேண்டியதாயிற்று.

என் அக்கா, அவர்களை 9 என நினைத்து கொண்டாள். திருநங்கை எனுமளவிற்கு அவள் பதிவுலகின் முகவரி அறிந்தவளல்ல. அவளுக்கு எப்படி புரிய வைப்பது என யோசித்து, மண்டை காய்ந்து அப்புறம் வசதியாய் மறந்தும் விட்டேன். படம் முடிவதற்குள் ஹோமோ கான்செப்ட் அவளுக்கு வசப்பட்டதா எனத் தெரியவில்லை.

ஆனால், அவளின் கேள்விகள் என்னை வெம்பி நொங்கெடுத்துக்கொண்டே இருந்தது. ஹோமோ குறித்து பல அலசல்கள் பதிவுலகில் நிகழ்த்தியாயிற்று. சென்னை’யில் அவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றே நினைக்கிறேன். அல்லது, சென்னையில் நான் பொதுபோக்குவரத்தை பயன்படுத்தியதால் கிட்டிய அனுபவமாகவும் இருக்கலாம்.

அந்த காலத்தில், திட்டு வாங்கிக்கொண்டவது பெண்கள் பக்கம் சென்றுவிடுவேன். ஆண்கள் பக்கம் நின்றால் குறைந்தது 2 ஓரினச்சேர்க்கையாளர்கள் நம்மை தடவிவிட்டு ஒரு ரொமாண்டிக் லுக் விடுவார்கள். அலறி புடைத்து, கூட்டத்தில் புகுந்து முன்சென்றால் அங்கு பெண்களிடம் இடிபட வேண்டி இருக்கும். சில அத்தைகள் வலியவந்து உரச ஆரம்பித்து விடும். பேருந்தின் சூழல் மக்களின் அடிப்படை உணர்ச்சிகளை எளிதில் தட்டிவிடுவதாகவே நான் கருதுவதுண்டு.

தியேட்டருக்கு தனியாக சென்று, மயிரிழையில் எஸ்’ஸாகிய அனுபவமும் உண்டு. Gay'க்கு காரணியான Gene'ஐ கண்டுபிடித்துவிட்டார்கள் எனவே மக்களை நொந்து பயனில்லை. அவர்களுடன் வாழ கற்றுக்கொள்வதே மனிதாபிமானமாகும். சில நாட்களுக்கு முன் Inner Ring Road'ல் ஒரு Gay Couple’ஐ காண நேர்ந்தது. வரும் நாட்களில் இது மிகவும் வெளிப்படையாகும்.

ஹோமோ, gay என்ற buffer விட்டே நம் பிள்ளைகளை வளர்க்க வேண்டிய சூழலில் இருக்கிறேம். Adventure'க்காக ஹோமோ’வை முயற்சிப்பவர்களும் உண்டு. இனி Bisexual பரவலாக எடுத்தாளப்படும் ஒரு சொல்லாக இருக்கலாம். காமெடி பீஸாக இல்லாமல், சற்று முதிர்ச்சியுடன் ஹோமோ விடயத்தை அனுகிய வெங்கட்பிரபு பாராட்டத்தக்கவர். இது ஒரு நல்ல தொடக்கம் மட்டுமே.
Milk போன்ற படங்களின் சாத்தியம் வருங்கால தமிழகத்தில் நடந்தேறலாம்.

ஹோமோக்களை நாகரீகமாக எதிர்கொள்ளுவது, அவர்களின் குற்ற
உணர்வை அதிரிக்காமல் சமூகத்தோடு அரவணைக்க உதவும். Hey I'm not into it.. கொஞ்சம் தள்ளி நிக்கிறீங்களா?? அலுவலகத்திலும் இதுபோன்ற சூழலை எதிர்கொள்ள நம்மை பதப்படுத்திகொள்வது நன்று.

The Bird Cage அருமையான ஹோமோ குடும்ப நகைச்சுவை படம். சம்பத் பாத்திரத்தை காணும் பொழுது அந்த படம் தான் நினைவிலாடியது. Happy Together மிகவும் உணர்வுபூர்வமான படம். உறவென்பது ஆணுக்கும் பெண்ணுக்குமானது என்ற தளத்திலேயே வாழ்ந்து மடிந்தவர்கள் மகிழ்ச்சியானவர்களாய் இருந்திருக்ககூடும். அப்படி நினைத்து, அது கண் முன்னே சரியக்காணும் என் அக்கா போன்றவர்களும், அதற்கான எடுகோள்களை வெளிப்படையாக நிறுவ முடியாமல் இருட்டை வெறிக்கும் நானும்.. வரும் நாட்களில் இல்லாமல் போகலாம். Gay, Les, Straight, Bi முதலிய அன்றாட சொல்லாடல்களுடன் விரைந்து கொண்டிருக்கும் எதிர்காலம்.

1 comment:

Anonymous said...

hey naanu unna mari romba nda problems face panitapa mudiyala