Friday, September 18, 2009

Classic Vintage Retro - Down the memory lane

மூன்று பாடல்கள்:

1. Bang Bang - Kill Bill Vol 1
2. Summer wine - Villie Volo
3. Dave Mathews / Carlos Santana- Love of my life

மூன்றுமே எனக்கு மிக பிடித்த பாடல்கள். முதல் பாடல் Kill Bill, எனக்கு மிகப்பிடித்த படம், பாடல்.

சென்ற வருடம் இரண்டாவது பாடலை மிகவும் விரும்பி கேட்டுக்கொண்டிருந்தேன். இன்று ஏனோ கேட்டவேண்டும் போல இருந்தது யூடியூபை தட்டினேன்.

மூன்றாவது Dave Mathews, இந்த ஒரு பாடலின் மூலம் எனக்கு மிகவும் பிடித்த குரல், Carlos என் மனதிற்கு பிடித்த கிட்டாரிஸ்ட்.

இந்த மூன்று பாடல்களில் முதலிரண்டு பாடல் Nancy Sinatara என்ற பாடகி 60களில் பாடியது என இப்பொழுது தான் அறிந்தேன். அருமையான பாடல்கள்.

மூன்றாவது பாடல், Brahms #3 symphony என இப்பொழுது தான் அறிந்தேன். மிகவும் இனிமையான சிம்பொனி. முதலில் இதை கேட்டு பின்பு பாடலை கேட்கும்பொழுது, அந்த பாடலின் இனிமைக்கான காரணம் பிடிபடுகிறது.

இசை ஒரு மாய உலகம், மது புட்டி... பழமை மேலும் மேலும் சுவை கூட்டுகிறது. அதை புதிய வடிவில் தர முற்படும் இந்த தலைமுறையின் கனவுகளின் சிறகுகளில் புதிய பரிமாணத்தில் மெருகேறி பறக்கிறது Classical Music. இந்த மூன்று பாடல்களும் இன்றைய சிலிர்ப்பிற்கான காரணம், பெய்யென பெய்யும் மழையைத் தாண்டி..


2 comments:

பிரேம்ஜி said...

இது மாதிரி மேற்கத்திய செவ்வியல் இசை சார்ந்த பதிவுகளை மிக அரிதாகவே பார்க்கிறேன்.மிக்க நன்றி.எனக்கு மிக பிடித்த சிம்போனிகளில் ஒன்று ப்ராம்ஸ் இன் மூன்றாவது சிம்பொனி.http://www.youtube.com/watch?v=1trE3ms3AGo

Santana வின் இசையில் எனக்கு பிடித்த ஒரு பாடல் Corazón espinado இங்கே.http://www.youtube.com/watch?v=hFO0Nrr5z-U

Unknown said...

பிரேம்,

வருகைக்கு நன்றி. 1999ல் சூப்பர்நேச்சுரல் ஆல்பம் வந்து ஒரு 1 வருடத்துக்கு மேலாக இதை கேட்டு கேட்டு மெய்மறந்திருக்கிறேன்.

2000 இந்த ஆல்பம் 8 அகடமி விருது வங்கியது. MJ'விற்கு அடுத்து 8 விருது வாங்கிய ஒரே ஆல்பம் இது தான்.

சந்தானா ஒரு அற்புதமான கலைஞன். Try Black Magic Woman and many more I can list from him.

His Guitar is very Unique. In classic Mozart and Bethoven are my fav.

I have the Mozart 46 symphony collection. Quite a treasure it is. :)