Wednesday, April 2, 2008

திரைப்படங்களைத் தேடி..

பதிவின் பெயர்க்காரணம் எளிதில் விளங்கும் என நினைக்கிறேன். உலக சினிமாக்களை கவனித்து வரும் எவரும் அடையாளங் கண்டுக்கொள்ளக்கூடிய படம் சினிமா பெரடிசோ.

நான் ரசித்த, லயித்த உலக திரைப்படங்களை பதிவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஒரு தளமாக இப்பதிவு அமையும். மொழி, கலை, கலாச்சாரம், சமுதாய கட்டமைப்பு, அது சார்ந்த இலக்கியங்கள், இனக்குழு அடையாளங்கள், புவியியல் கூறு சாந்த வாழ்வியல் அம்சங்கள் என ஒவ்வொரு மொழி/தேசம் சார்ந்த திரைப்படங்கள் காட்டும் உலகம் தனித்தன்மையானது.

அதின் நான் கால் நனைத்து சென்ற சில திரைக்காவிய ஓடைகளின் அழகியலை, அதன் குளிர்ச்சியை பொதுவில் சிலாகிக்கும் இப்பதிவில் உங்கள் தெரிவுகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள், இப்பயணம் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும்.


3 comments:

nagoreismail said...

தொடர்ந்து எழுதவில்லையே, நேரமின்மையா?

சென்ஷி said...

முழுமையாக எல்லாப் இடுகைகளையும் வாசித்துவிட்டேன் :-)

Unknown said...

எழுதுவதின் சலிப்பே அன்றி வேறு ஒரு காரணுமும் இல்லை இஸ்மாயில். தினமும் இரண்டு திரைப்படங்கள் பார்க்கும் சூழலில், அனைத்து படத்தையும் பகிந்து கொள்வது சற்று கடினம்.

பார்த்துக்கொண்டே இருப்பதால், எழுவது சலிக்கச் செய்கிறது.


சென்ஷி, வருகைக்கு வந்தனம். :)